Ads (728x90)

கனடா நாட்டில் வெப்பநிலையானது 34 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்து உள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், கிழக்கு மாகாண நகரான மோன்ட்ரியலில் 12 பேர் அனல் காற்றுக்கு பலியாகி உள்ளனர்.  ஈஸ்டர்ன் டவுன்ஷிப்ஸ் பகுதியில் கடந்த 48 மணிநேரத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

இதேபோன்று நேற்று 2 பேர் மோன்ட்ரியல் புறநகர் பகுதியில் பலியாகி உள்ளனர்.  இதனால் அனல் காற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 19 ஆக உயர்ந்துள்ளது.

அனல் காற்றுக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் எனது நினைவுகள் உள்ளன.  மத்திய மற்றும் கிழக்கு கனடாவில் வெப்பம் தொடரும்.  அதனால் மக்கள் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ டுவிட்டர் வழியே அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட அனல் காற்றுக்கு கனடா நாட்டின் மோன்ட்ரியல் நகரில் 100 பேர் வரை பலியாகி உள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget