Ads (728x90)

அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் அமைந்துள்ளது சுதந்திர தேவி சிலை. 93 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை, அமெரிக்காவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. புகழ்பெற்ற இந்த சிலை மீது  நேற்று மனித உருவம் ஒன்று ஏறிச்செல்வதை, சிலர் கவனித்தனர்.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், சுதந்திர தேவி சிலையின் பீடத்தில் அமர்ந்து இருந்த பெண்ணை கீழே இறங்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்தப்பெண் கீழே இறங்க மறுத்தார். இதையடுத்து, சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, அப்பெண்ணை கைது செய்து கீழே இறக்கி கொண்டு வந்தனர்.

சுதந்திர தேவி சிலை மீது ஏறி போராட்டம் நடத்திய பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அமெரிக்காவி்ல் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலைமீது ஏறி போராட்டம் நடத்த முயன்றது தெரிய வந்தது. அந்தப்பெண் மீது, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைதல், மோசமான நடத்தை ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்ய அந்நாட்டு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget