Ads (728x90)

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசிய கட்சியால் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் சம்பந்தமாக விஜயகலா  மகேஸ்வரன்  தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் விளக்கம் கேட்பதற்காக அவர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவரை இன்று கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அவர் அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget