
2004 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் நடிக்கவில்லை. அவர் நவம்பர் 12, 2002 இல் திரைப்பட இயக்குனரான கோல்டி பெல்லை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.
சமீபத்தில், நடிகை முதல் எபிசோடில் ஒளிபரப்பப்பட்ட பிறகு, ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'இந்தியாவின் சிறந்த டிமேர்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
43 வயதாகும் சோனாலி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அவர் இதற்காக நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
சில நேரங்களில் நீங்கள், வாழ்வில் எதிர்பார்ப்பது நடப்பது இல்லை. சமீபத்தில் எனக்கு அபாயாகரமான புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் வலி தரும் பல சோதனைகள் செய்யவேண்டி இருந்தது. இந்த சோதனை மூலம் அபாயமான புற்று நோய் இருப்பது தெரியவந்தது. என கூறினார்.
மேலும் அவர் தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் தனக்கு ஆதரவு வழங்குவதற்காக நன்றி தெரிவித்தார், மேலும் அவர் நியூயார்க்கில் சிகிச்சைக்கு வருகிறேன் என்று கூறினார்.
Post a Comment