Ads (728x90)

விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.யின் கருத்து தவறானதென்பது எமக்கும் தெரியும், ஆனால் அவரது கருத்தை வைத்துகொண்டு அரசியல் செய்யாது வடக்கின் இன்றைய நிலைமையையும் அனைவரும் சிந்துக்க வேண்டும் என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய காரணிகள் விடுதலைப் புலிகளை ஆதரித்து அவர் பேசிய விடயங்கள் தவறானது. ஆனால் இன்று வடக்கின் நிலைமை பற்றி எவரும் வாய் திறக்காது உள்ளது ஏன்?

இன்று வடக்கில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள், போதைப்பொருள் பாவனை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்கள் என்பன அங்கு மக்களின் அன்றாட வாழ்கையை பெரிதும் பாதித்துள்ளது.
இது குறித்து அரசாங்கமாக நாம் அக்கறை செலுத்த தவறி வருகின்றோம். மக்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கான சுதந்திரத்தையும் அமைதியான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget