தேர்தல்கள் சட்டத்திற்கமைய புதிய வாக்காளர் பட்டியலை அரசாங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வர்த்தமானியில் பிரசுரிக்க திட்டமிட்டது. இருப்பினும் மாகாண சபை தேர்தல்களை இந்த வருடத்தின் இறுதிக்குள் நடத்த திட்டமிட்டிருப்பதனால் புதிய தேர்தல் வாக்காளர் பட்டியலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டும்.
அத்தாட்சிப்படுத்தப்படும் நடவடிக்கைகள் திட்டமிட்டப்படி இடம் பெற்றால் இந்த வருடத்தில் மாகண சபை தேர்தல்களை டிசம்பர் 22 அல்லது 29 ஆகிய தினங்களில் நடத்த முடியும். புதிய வாக்காளர் பட்டியலுக்கிணங்க நாடளாவிய ரீதியாக இரண்டு இலட்சம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இம்முறை ஆபிரிக்க மற்றும் போர்த்துக்கீசர் வம்சாவளியினரையும் புதிய வாக்காளர் பட்டியலுக்கிணங்க இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment