Ads (728x90)


மனதாலும் பிறருக்கு தீங்கு எண்ணாத மீன ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்து  அக்.4ல் 9-ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். இதுவரை ஏற்பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள்.  மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும்.

தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. மொத்தத்தில் குருபெயர்ச்சியால் ‘நீங்கள் தான் நம்பர் ஒன்’ என்று சொல்லும் விதத்தில் வாழ்வில் ஜமாய்ப்பீர்கள். கோச்சார பலனை கணிக்கும் போது மற்ற கிரகங்களின் நிலையையும் பார்க்க வேண்டும். சனிபகவான் 10-ம் இடத்தில் உள்ளதால் தொழிலில் பிரச்னை குறுக்கிடலாம். உடல் உபாதை ஏற்படலாம். ராகு 5-ம் இடமான கடகத்தில் இருக்கும் ராகு 2019 பிப்.13ல்  4-ம் இடமான மிதுனத்திற்கு வருகிறார். அதனால் வீண்அலைச்சல், மனக்குழப்பம் ஏற்படலாம்.  கேது 11-ம் இடமான மகரத்தில் இருப்பதால் ஆரோக்கியம், குடும்பத்தில் மேன்மை உண்டாகும். அவர் 2019 பிப்.13ல் 10-ம் இடமான தனுசு ராசிக்கு சென்ற பின் நன்மை குறையும்.

இனி பொதுவான பலனைக் காணலாம். முயற்சி தடையின்றி நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமுகத்தில் மதிப்பு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர்களின் வருகையும், அவர்களால் நன்மையும் உண்டாகும். சகோதரவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். நண்பர்கள், சான்றோர்கள் ஆலோசனையை பின்பற்றி முன்னேற்றம் அடைவீர்கள். 2019 மார்ச் 13க்கு பிறகு முயற்சி எடுத்தால் புதிய வீடு கட்டலாம். ஆனால் கடன் வாங்க வேண்டியதிருக்கும்.

பணியாளர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம், பணிமாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் முயற்சித்தால் நல்ல சம்பளத்தில் பணி கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தனியார் துறையினருக்கு விண்ணப்பித்த கடனுதவி  கிடைக்கும்.  சக ஊழியர்களின் ஒத்துழைப்பர். 2019 மார்ச் 13க்கு பிறகு பணிச்சுமை கூடும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தைப் பிரியும் நிலை வரலாம்.  பணிச்சுமையால் சிலர்  அவதிப்படவும் இடமுண்டு.

தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும்.அவர்களின் ஆலோசனையால் நல்ல வளர்ச்சி காண வாய்ப்புண்டு.  2019 மார்ச் 13க்கு பிறகு  செலவு அதிகரிக்கும். வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு வகையில் பரிசு பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. 2019 மார்ச் 13க்கு பிறகு சிரத்தை எடுத்தால் மட்டுமே பணி சிறக்கும்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு நாற்காலி கனவு பலிக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் ஆதரவால் உற்சாகமுடன் செயல்படுவர்.  வெளிநாடுகளுக்கு அரசியல் பயணம் மேற்கொள்வர்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். ஆசிரியர் மத்தியில் நற்பெயர் உண்டாகும். 2019 மார்ச் 13க்கு பிறகு  அக்கறையுடன் படிப்பது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விவசாயிகள் நவீன தொழில் நுட்பத்தால் வளம் காண்பர். மஞ்சள், நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம், காய்கறி வகைகள் மூலம் அதிக மகசூல் பெறுவர். கால்நடை வளர்ப்பில் வருமானம் உயரும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும்.

பெண்கள்  குடும்பத்தினரின் மத்தியில் நற்பெயர் காண்பர். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். மனம் போல சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். புத்தாடை, அணிகலன்கள் சேரும். 2019 மார்ச் 13க்கு பிறகு சற்று பொறுமை தேவை. உடல்நிலை திருப்தியளிக்கும்.

பரிகாரம்:
●  சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
●  சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு பானகம்

Post a Comment

Recent News

Recent Posts Widget