Ads (728x90)

‘அசோகா’ படத்தில் கலிங்க போரை தவறாக சித்தரித்து ஒடிசா மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அங்கு படத்தை நிறுத்தி விட்டனர்.

அந்த படம் வெளியாகி 11 வருடங்கள் ஆன நிலையில் கலிங்க சேனா என்ற அமைப்பு இப்போது மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தது. ஷாருக்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஒடிசாவில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் ஆக்கி உலக போட்டியை தொடங்கி வைக்க வரும் ஷாருக்கானுக்கு கருப்பு கொடி காட்டுவோம், முகத்தில் மை வீசுவோம் என்றும் அந்த அமைப்பின் செயலாளர் நிஹார் பானி அறிவித்தார்.

இதனால் பரபரப்பு நிலவியது. ஷாருக்கானுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறும்படி இந்திய ஆக்கி சங்க தலைவர் முகமது முஸ்டாக் அகமது கோரிக்கை விடுத்தார். ஷாருக்கான் இந்திய அளவில் பிரபலமானவர், ஆக்கி விளையாட்டை ஊக்குவித்து வருகிறார். ‘சக்தே இந்தியா’ படத்தில் ஆக்கி பயிற்சியாளராக நடித்துள்ளார். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் கூறினார். மாநில அரசும் கோரிக்கை விடுத்தது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கலிங்க சேனா அமைப்பு அறிவித்தது.

Post a Comment

Recent News

Recent Posts Widget