Ads (728x90)

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் `விஸ்வாசம்'. நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அஜித் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் கதை என ஒரு தகவல் இணையத்தில் உலவி வருகிறது. 12 வயது குழந்தை ஒன்றுக்கு அப்பாவாக படத்தில் நடிக்கிறாராம் அஜித். தன் மகளை எப்படி விளையாட்டுத் துறையில் சாதிக்க வைக்கிறார் என்பதை முழுக்க முழுக்க காமெடியாக சொல்ல இருக்கிறதாம் படம்.

`என்னை அறிந்தால்' படத்தில் அஜித் மகளாக நடித்த பேபி அனிகாதான் இந்தப் படத்திலும் மகளாக நடிக்கிறாராம். இது நிஜமான கதையா இல்லை ரசிகர்களின் யூகமா எனத் தெரியவில்லை. இமான் இசையில் வெற்றி ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget