Ads (728x90)

பா.இரஞ்சித்தின் ‘காலா' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0' மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட' என 2 படங்கள் உள்ளது. இதில் ‘பேட்ட' படத்தை ‘சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. ‘ராக்ஸ்டார்' அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், ஷபீர், இயக்குநர்கள் சசிகுமார் - மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் மற்றும் 2 போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் புதிய போஸ்டரை ‘சன் பிக்சர்ஸ்' நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget