Ads (728x90)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடும் போது முதலாவதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும். எனினும், நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 135வது சரத்தின் கீழ் நிலையியல் கட்டளைச் சட்டம் ஒத்திவைக்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டதுடன் அந்த யோசனை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பெரும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றமான நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget