
இன்று கூடவுள்ள பாராளுமன்றத்தில் நேற்றைய நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஏற்ப, அரசாங்க தரப்பு ஆசனங்களில் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் அமரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்க் கட்சி ஆசனங்களில் அமரப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சபாநாயகரினால் அனுப்பப்பட்ட கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் இன்று பாராளுமன்றத்தில் அரசாங்க தரப்பு எதிர்த்தரப்பு ஆசன என ஆசன ஒதுக்கீடுகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் இன்று இரு பிரதி அமைச்சர்களும், இரு அரசாங்க தரப்பு உறுப்பினர்களும் சந்திக்கவுள்ளனர். இன்றும் கூச்சல் குழப்பம் காரணமாக பாராளுமன்றம் சபாநாயகரினால் ஒத்திவைக்கப்படுமா? அல்லது பாராளுமன்றத்தில் வன்முறை இடம்பெறவுள்ளதாக தெரிவித்து, அவ்வசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றம் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்படுமா? என்பதை பொது மக்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment