Ads (728x90)

கதிர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்'. இந்த படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

இப்படத்தை ‘அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா' போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொடக்ஷன்ஸ்' மூலம் தயாரித்திருந்தார். கதிருக்கு ஜோடியாக ‘கயல்' ஆனந்தி டூயட் பாடி ஆடியிருந்தார்.

மேலும், இப்படத்தில் ஒரு நாய் நடித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இதற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget