
இதில் ‘டாக்ஸிவாலா' படத்தை ராகுல் சங்கரித்யன் என்பவர் இயக்கியுள்ளார். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக பிரியங்கா ஜவல்கர், மாளவிகா நாயர் என டபுள் ஹீரோயின்ஸாம். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இதற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாய்குமார் ரெட்டி திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார்.
‘UV கிரியேஷன்ஸ் – GA2 பிக்சர்ஸ்' நிறுவனங்கள் இணைந்து இதனை தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் 2 டீசர்கள், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற நவம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படம் ‘தமிழ் ராக்கர்ஸ்' என்ற இணையதளத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Post a Comment