
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இதுவரை இரண்டு போஸ்டர்கள் மட்டுமே படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளன. பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் விஸ்வாசம் படத்துடன் ரஜினிகாந்தின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி ஆகிய படங்களும் திரைக்கு வர இருக்கின்றன.
ரஜினி நடித்திருக்கும் பேட்ட படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி அனிருத் இசையமைக்கும் அந்தப் படத்தின் மோஷன் போஸ்டரில் அதன் இசைத் துணுக்கு இடம்பெற்றிருந்தது. விஸ்வாசம் படத்தின் இசை குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.
படத்தின் மோஷன் போஸ்டரை, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது என்பதையும் தயாரிப்பு நிறுவனம், மோஷன் போஸ்டரிலேயே உறுதி செய்துள்ளது. மோஷன் போஸ்டர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்ரனர்.
Post a Comment