Ads (728x90)


தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான காரணங்கள் என்னவென்பது தெரியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் குற்றச்சாட்டு என்ன என்று எனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.“நான் எந்த விதத்தில் நம்பிக்கையை உடைத்தேன் என்று கூட தெரிந்து கொள்ள எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட கடந்த 14ஆம் திகதி நான் பேச சந்தர்ப்பம் கேட்டேன் எனினும் சபாநாயாகர் அதற்கு அனுமதிக்கவில்லை. அதனாலேயே நான் நாடாளுமன்றத்தை விட்டு எழுந்து சென்றேன்” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார். நேற்றைய கூட்டம் ஆரம்பித்தது முதல் அமைதியாக இருந்த, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உரையாற்றுமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பித்தோம். அதில் வெற்றி பெற்றோம். எங்களுக்கு அரசாங்கம் ஒன்றை அமைக்க இடமளிக்குமாறே கேட்கின்றோம் என ரணில் தனது உரையை சுருக்கமாக முடிந்துக் கொண்டார்

Post a Comment

Recent News

Recent Posts Widget