Ads (728x90)


இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் தகவலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் மஹிந்த அமரவீர இன்று தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி காரணமாக அடுத்த சில நாள்களில் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிராபத்து ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில் மேற்கண்டவாறு மஹிந்த அமரவீரவின் அதிர்சித் தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் தற்போதுள்ள அரசியல் நெருக்கடியை சபாநாயகரே உருவாக்கியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் அதற்கான பொறுப்பை சபாநாயகரே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அரசமைப்பின் கீழ் பிரதமரை அல்லது அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை. இதற்கான அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே உள்ளன. சபாநாயகர் கரு ஜயூசூரிய தனது அதிகார வரம்புகளை மீறிச் செயற்படுகின்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget