Ads (728x90)

‘சிவலிங்கா' படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காஞ்சனா 3' . ஏற்கெனவே, ஹாரர் காமெடி ஜானரில் வெளியான ‘முனி, காஞ்சனா , காஞ்சனா 2  ஆகிய இதன் முந்தைய பாகங்கள் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆகையால், இந்த படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ‘சன் பிக்சர்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராகவேந்திரா புரொடக்ஷன்' மூலம் தயாரித்து, இயக்கி வருகிறார்.

‘முனி' முதல் பாகத்தில் லாரன்ஸுடன் டூயட் பாடிய வேதிகா மற்றும் ‘பிக் பாஸ்' புகழ் ஓவியா என டபுள் ஹீரோயின்ஸாம். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். தற்போது, இப்படத்தை அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெகு விரைவில் ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget