Ads (728x90)

பாலிவுட் ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் திருமணம் இன்றும் நாளையும் இத்தாலியில் நடைபெறுகிறது. கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் இன்று திருமணம் செய்து கொள்கின்றனர்.

இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில், வில்லா தெ பால்பியானெல்லோ என்ற வில்லாவில் திருமணம் நடைபெற உள்ளது. இன்று கொங்கனி முறைத் திருமணமும், நாளை ஆனந்த் கராஜ் முறை திருமணமும் நடைபெற உள்ளன. இவர்களின் திருமணத்திற்காக அழகிய நகரமான லேக் கோமாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 திருமணத்திற்காக இந்தியாவிலிருந்து மொத்தம் நாற்பது பேர் மட்டுமே இத்தாலி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் கூட திரைத்துறையைச் சார்ந்தவர்கள் இல்லையாம். தீபிகா, ரன்வீரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமண விழாவுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினரையும் மிகுந்த மரியாதையோடு இருவரும் சேர்ந்து வரவேற்றுள்ளனர்.

திரையுலகினருக்கு திருமணத்தில் அழைப்பு இல்லை என்பதால், தீபிகாவும் ரன்வீரும் தங்களின் வழிகாட்டியாக நினைக்கும் ஷாருக்கான், இயக்குனர் சஞ்சை லீலா பன்சாலி போன்றவர்களை முன்கூட்டியே சந்தித்து ஆசி பெற்றனர். திருமணம் முடிந்தபிறகு நவம்பர் 21ஆம் தேதி பெங்களூருவிலும்,28 ஆம் தேதி மும்பையிலும் மிகப்பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அதற்கு முக்கிய பிரமுகர்களுக்கும் திரையுலகினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget