
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என செப்.,28 ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சீராய்வு மனுக்கள், அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், ஜனவரி 22 ல் விசாரிக்கப்படும் என கூறி உள்ளது.
நவம்பர் 16 மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளதால் இந்த வழக்குகளை அவசரமாக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த ரஞ்சன் கோகாய் அமர்வு, சபரிமலை தொடர்பான வழக்கை ஜனவரி 22 ல் விசாரிப்பதாக ஏற்கனவே கூறிவிட்டோம்.
அப்போது மட்டும் தான் விசாரிக்க முடியும். அதற்கு முன் இது தொடர்பான எந்த மனுவையும் விசாரிக்கவோ, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவிற்கு தடை விதிக்கவோ முடியாது என தெரிவித்துள்ளது.
Post a Comment