எனவே இந்நிலையை கருத்தில் கொண்டு யாழ். மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக கிராம மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. முப்படையினர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு என்பன அனர்த்த நிலையை எதிர்கொள்ள கூடிய நிலையில் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்த அவசர நிலைமைக்கு ஏற்ப பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கஜா சூறாவளி இன்றைய தினம் இலங்கையின் வடக்கு பகுதி மற்றும் தமிழகத்தின் பாம்பனிற்கு அருகாக கரையை கடக்கவுள்ள நிலையில், கஜா சூறாவளியின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கஜா சூறாவளி தற்போது சென்னைக்கு கிழக்கே 490 கி.மீ. தூரத்திலும், நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே சுமார் 580 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
இன்று பி.ப. 4.30 மணிக்கும் இரவு 9.00 மணிக்கும் இடையில் கடலூர் மற்றும் பாம்பன் இடையே கஜா சூறாவளி கரையைக் கடக்கும் போது இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
Post a Comment