”வெற்றியை உறுதிப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணி தற்போது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்தி வருகின்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மஹிந்த அணியினர் இன்று பாராளுமன்றில் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்துக்கும், தர்மத்துக்கும் விரோதமானதாகும். மீயுர் அதிகாரம் கொண்ட சட்டவாக்க சபையின் நம்பிக்கையை காக்க முயன்ற சபாநாயகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களின் செயற்பாட்டால் காலகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த பாராளுமன்ற சம்பிரதாயங்கள் கொச்சைப் படுத்தப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை மைத்திரிபால சிறினே கைவிட்டு விட்டார். நாம் எப்போதும் அரசியலமைப்புக்கு உட்பட்டே செயற்படுவோம். அரசியலமைப்புக்கு ஏற்ப தேர்தலை நடத்தினால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம். உங்கள் வாக்குரிமையின் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment