Ads (728x90)



அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செய்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் தலைவர் எஸ். ரணுக்கே மீளாய்வு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார். இதன்போது குழுவின் ஏனைய உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

அரச துறையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சுற்றுநிருபங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி அரச துறையினரின் சம்பளம் தொடர்பில் பிரச்சினைகள் அல்லது ஏற்றத்தாழ்வுகள் காணப்படுமாயின் அவற்றை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானத்திற்கமைய ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget