எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் சந்திப்பின்போது உரிய தீர்மானத்தை எடுப்பதற்கும் பாராளுமன்றத்தினுள் அமைதியாகவும் வன்முறையை தவிர்த்து செயற்படுவது தொடர்பிலும் அனைவரும் ஒருமைபாட்டிற்கு வந்தனர்.
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தான் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையை பயன்படுத்தியோ வாக்கெடுப்பை நடத்த வேண்டியது அவசியமென்று ஜனாதிபதி இதன்போது அனைவரிடத்திலும் கேட்டுக்கொண்டார்.
அத்தகைய நடவடிக்கை நாட்டின் புத்திஜீவிகள், பொதுமக்கள் மற்றும் சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த முறையாக அமையுமென்று தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தை மாற்றியமைப்பது போன்ற மிக முக்கிய விடயங்கள் தொடர்பில் முடிவுகளை மேற்கொள்ளும்போது நிலையியற் கட்டளைகளில் குறிப்பிட்டிருந்த போதிலும் குரல் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையாக அமையாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி நடந்து கொள்வது அரசியல் நீதிக்கு பொருத்தமானது இல்லையென இராசம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். 26ம் திகதிக்கு முற்பட்ட நிலைமையை ஏற்படுத்துவதே தற்போதையை நிலைமையை சரிசெய்ய உள்ள பொருத்தமான வழியெனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment