Ads (728x90)

மாலைதீவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமட் சாலிக் வெற்றி பெற்றதை அடுத்து புதிய ஜனாதிபதியாக இன்று அவர் பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு பல நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலைதீவின் கட்டுமானம், சுகாதார மேம்பாடு, மற்றும் மனித வள மேம்பாட்டு போன்றவற்றின் வளர்ச்சியில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற விரும்புகின்றது. தங்களது பணி சிறக்க வாழ்த்துகின்றேன் என மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget