
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பிரத்தியேக விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை அனுமதிப் பத்திரம் கிடைக்காத பிரத்தியேக விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின், அடையாள அட்டை இலக்கத்தை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தயோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிட்டு, அனுமதிப் பத்திரத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமென இலங்கைப் பரீட்சை திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.
Post a Comment