
இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 2 எடிதர என்ற கப்பலுடன் ஓர் இந்திய மீன்பிடிப் படகு மோதியதால் மூழ்கியுள்ளது. இந்த சம்பவம்;; நெடுந்தீவின் தென் கடல் பகுதியில் இடம்பெற்றதுள்ளது.
இதுதொடர்பாக வெளி நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளதாவது:
இலங்கை கடற்படைக் கப்பல் எடிதர 2 உடன் ஓர் இந்திய மீன்பிடிப் படகு மோதியதால் நவம்பர் 28 1815 மணியளவில் தென் நெடுந்தீவில் மூழ்கியது. இலங்கைக்குச் சொந்தமான நீர்ப்பரப்பில் சட்டவிரதோமாக மீன்பிடியில் ஈடுபட்ட சுமார் 30 படகுகளுடன் இலங்கைக் கடற்படைக் கப்பல் கூடப் பயணித்தபோதே இத்துயர நிகழ்வு இடம்பெற்றது. படகுகளின் தடுமாற்றத்தாலும் நிகழ்வு நடந்தபோது நிலவிய தெளிவற்ற பார்வையினாலுமே இந்த விபத்து சம்பவித்தது.
கப்பலில் இருந்த சில பொருட்களையும் 4 பேர் கொண்ட குழுவினையும் இலங்கைக் கடற்படை காப்பாற்றியது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காப்பாற்றப்பட்ட குழுவினர் குறிப்பிட்ட அப்பொருட்களுடன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்படுவர்.
Post a Comment