Ads (728x90)

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் விலை ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு உரிய பிரிவினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பிரதமர் உரையாற்றினார்.

இந்த சந்திப்பு அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

லங்கா ஐஓசி நிறுவன எரிபொருள் நிலையங்களிலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களிலும் விற்கப்படும் எரிபொருள்களின் விலை ஒரே மட்டத்திற்கு கொண்டு வரப்படுவது அவசியம். ஐஒசி நிறுவன எரிபொருள் விநியோக நிலையங்களில் விலை மட்டங்கள் அதிகமாக இருப்பதால் தாம் நஷ்டம் அடைவதாக எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள் தெரிவித்தார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget