Ads (728x90)

நாட்டிலுள்ள சகல அமைச்சுக்களினதும் செலவுகளை  நிறுத்துவதற்கான பிரேரணையொன்று இன்று (30) பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

பிரதமருடைய செலவுகளை நிறுவத்துவதற்கான பிரேரணை 123 பெரும்பான்மை வாக்குகளினால் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் செலவுகளை மேற்கொள்வது அரச விரோத நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சகல அரசியல் கட்சிகளுடனும் இணைந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget