Ads (728x90)

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்படும் போது குறித்த இளைஞனிடம் 1 கிராம் கஞ்சா இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டு கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலேயே 26 வயதான குறித்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது கண்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget