Ads (728x90)

வேகமாக வளர்ந்து வரும் உலகின் டாப் 10 நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருப்பூர், திருச்சி, சென்னை ஆகியன இடம் பெற்றுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பொருளாதார ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உலக பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. இதில் எதிர்கால ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) அடிப்படையில் 2019 முதல் 2035 வரை உலகின் சில நகரங்களில் வளர்ச்சி மிக வேகமாக நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் உலகின் 20 நகரங்களின் பட்டியலில் 17 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 2019 - 2023 ம் ஆண்டுகளில் வேகமாக வளரும் இந்திய நகரங்களின் டாப் 10 பட்டியலில் சூரத் முதல் இடத்திலும், ஆக்ரா 2வது இடத்திலும் உள்ளன. 3வது இடத்தில் பெங்களூர், 4வது இடத்தில் ஐதராபாத், 5வது இடத்தில் நாக்பூர், 6வது இடத்தில் திருப்பூர், 7 வது இடத்தில் ராஜ்கோட், 8 வது இடத்தில் திருச்சி, 9 வது இடத்தில் சென்னை, 10 வது இடத்தில் விஜயவாடா உள்ளது. மக்கள் தொகை அதிகரித்து வரும் டாப் 10 நகரங்களின் பட்டியலில் மும்பை இடம்பிடித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget