
இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக 2017 ம் ஆண்டில் 12.4 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் ஆப் இந்தியா உள்பட பல ஆய்வு நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆராய்ச்சிகளின் முடிவில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 77 சதவீத மக்கள் தொகை காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புகைபிடித்தலை விட மிக மோசமாக இந்தியாவில் 8 ல் ஒருவர் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காற்று மாசுபாட்டில் இந்தியா, சீனாவை மிஞ்சி வருவதாக கூறப்படுகிறது. கிழக்கு மற்றும் வட மாநிலங்களில் குறிப்பாக பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை மாசுக்களே அதிகம்.
வட இந்தியாவில் டில்லி, அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் நாட்டிலேயே அதிக அளவு பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்தியாவில் காற்று மாசு காரணமாக 26 சதவீதம் பேர் இளமையிலேயே உயிரிழக்கும் அபாய நிலை உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment