
விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. “வாழ்க்கையில் ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்ல. ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்ல” என்று பஞ்ச் பேசி வேட்டியை மடிச்சு மீசையை முறுக்கி அஜித் அட்டகாசமாக அறிமுகமாகிறார். “பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா” என்று பேசி அரிவாளுடன் வருபவர்களை வயக்காட்டில் துவம்சம் செய்கிறார்.
கலப்பையை சுமந்து வருகிறார். நயன்தாரா சேலையில் புல்கட்டு சுமக்கிறார். அவரை பார்த்து நீங்க பேரழகு என்று அஜித் வர்ணிப்பது இன்னொரு அழகு. என் கதையில் நான் ஹீரோடா என்று சொல்லும் ஜெகபதி பாபுவுக்கு. என் கதையில் நான் வில்லன்டா என்று பதிலடி தருகிறார். உங்க மேல கொல கோவம் வரணும். ஆனா உங்களை எனக்கு பிடிச்சிருக்கு சார் என்கிறார்.
இறுதி காட்சியில் “ஏறி மிதிச்சேன்னு வை ஏரியா வாங்கிறது இல்லை. மூச்ச கூட வாங்க முடியாது. பேரு தூக்கு துரை. தேனி மாவட்டம். ஊர் கொடுவிழார் பட்டி. மனைவி நிரஞ்சனா, பெண் பெயர் சுவேதா. ஒத்தைக்கு ஒத்தை வாடா” என்கிறார். எதிரிகளை ஆவேசமாக பந்தாடுவது மழையில் பைக்கின் பின் டயரால் வில்லனை நசுக்குவது என்று அஜித்தின் அதிரடிகள் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
விவசாயத்தை தொடர்புபடுத்தும் கதைபோல் காட்சிகள் உள்ளன. டிரெய்லர் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி உள்ளது. சிறிது நேரத்திலேயே பல லட்சம் பேர் பார்த்தனர்.
Post a Comment