Ads (728x90)

அனைத்து மாகாணங்களின் ஆளுனர்களும் எதிர்வரும் சில தினங்களில் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து ஆளுனர்களும் அழைக்கப்பட்டு குறித்த மாற்றத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலும் ஆளுநர்களின் இடமாற்றங்களே இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரேவும், மேல் மாகாண ஆளுநராக ஹேமகுமார நாணயக்காரவும், சப்ரகமுவ மாகாண ஆளுநராக நிலூக்கா ஏக்கநாயக்கவும், தென் மாகாண ஆளுநராக மார்ஷல் பெரேராவும், வடமேல் மாகாண ஆளுநராக கே. சீ.கோகேஸ்வரனும், ஊவா மாகாண ஆளுநராக பீபி ஏக்கநாயக்கவும், வடமத்திய மாகாண ஆளுநராக எம் பி ஜயசிங்கவும் செயற்படுகின்ற அதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget