Ads (728x90)


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டம் நேற்றிரவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த மத்திய குழுக் கூட்டம் சுமார 2 மணித்தியாலங்களுக்கு நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறானதாக அமைந்தாலும், அதற்கமைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் கொள்கை ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்தல் என்பன குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கட்சி உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டதாகவும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு மத்திய குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget