
இதைவைத்து 10 ஹெக்டர் நிலம் வாங்கவும் பிளான் குடும்பத்துடன் சேர்ந்து பிளான் பண்ணினர். எனவே பணத்தை எடுத்து வந்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடும்பத்தில் எல்லோரும் வயலுக்கு சென்றுவிட்டார்கள். போகும்போது கதவை மூடாமல் திறந்து விட்டு போய்விட்டிருக்கிறார்கள்.
கதவு திறந்து கிடக்கவும், அவர் வீட்டில் வளர்ந்து வந்த ஒரு ஆடு, உள்ளுக்குள் நுழைந்து டேபிள் மேல் இருந்த பணத்தை தின்றுவிட்டது. வயலிலிருந்து குடும்பத்தினர் வீடு திரும்பி வந்து பார்த்தால், பணத்தை காணோம்.
பிறகு டேபிள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டின் வாயில், கொஞ்சம் பிட்டு பிட்டாக பணத்துகள்கள் ஒட்டிக் கொண்டிருந்ததை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியாகி நின்றார்கள். 16 லட்சம் ரூபாயையும் ஆடு மென்று தின்றதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை
அதனால் ஆத்திரத்தில் அந்த ஆட்டை கொன்று குடும்பமே கோபத்துடன் சமைத்து சாப்பிட்டது. ஆட்டுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் அவர்களால் உழைத்து சம்பாதித்த அந்த 16 லட்ச ரூபாயை மறக்கவே முடியாமல் இன்னமும் சோகத்தில் உள்ளனர்.
Post a Comment