Ads (728x90)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 09 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலினூடாக பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டத்துக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

இதன் காரணமாக உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இடை நிலை மனுதாரர்களின் வாதங்களும் அதன் பின்னர் மனுதாரர்களின் பதில் வாதங்களும் மன்றில் இன்றைய தினம் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் பிரதம நீதியரசர் நளின் பெரோ உள்ளிட்ட 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

மனுக்கள் மீதான விசாரணைகளின் தீர்ப்பு நாளை வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget