
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பில் விமல், அஞ்சலி நடித்த 'மாப்ள சிங்கம்' என்ற படத்தை இயக்கியவர் ராஜசேகர். இவருடைய இயக்கத்தில் தான் 'ஜித்தன்' ரமேஷ் படம் தயாரிக்கிறார். நட்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் ஜீவாவும், அருள்நிதியும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்க இருக்கிறார்.
ஜீவா இப்போது 'ஜிப்சி', 'கீ', 'கொரில்லா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அருள்நிதி, ' புகழேந்தி என்னும் நான்' படத்தில் நடித்து வருகிரார். மஞ்சிமா மோகன் 'தேவராட்டம்' படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் மூவரும் இணைந்து நடிக்க, உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 13-ஆம் தேதி துவங்க இருக்கிறது.
Post a Comment