
இந்த 5ஜி சேவைகளால் வேகம், துல்லியம் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டின் மேற்கே உள்ள தி ஹேக் நகரில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி ஹூகைன்ஸ் பூங்காவில் நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து செத்து வானத்திலிருந்து கீழே விழுந்தன.
150-க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்த நிலையில் அதன் எண்ணிக்கை 297-ஆக ஆனது. இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் இதை கண்காணித்தனர்.மரங்களிலிருந்து பறவைகள் செத்து வீழ்ந்தன. மேலும் பல பறவைகள் தலையை தண்ணீருக்குள் விட்டுக் கொண்டன.
இவை அனைத்தும் 5ஜி சோதனை நடத்தப்பட்டதால் அதன் கதிர்வீச்சை எதிர்கொள்ளாமல் பறவைகளுக்கு இறப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
இதை பார்க்கும் போது ஷங்கர் இயக்கிய 2.ஓ படம் போல் உள்ளது. அந்த படத்தில் நெட்வொர்க் துல்லியமாகவும் வேகமாகவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக செல்போன் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட மதிப்பை காட்டிலும் அலைவரிசையை கூட்டி வைத்திருப்பர்.
இதனால் ஏராளமான பறவைகள் செத்து மடிந்துவிடும். இதற்காக அக்ஷய்குமார் போராடுவார். எனினும் அவரது பண்ணையில் இருந்த அனைத்து பறவைகளும் இறந்துவிடும். இதனால் அவர் பறவை போல் மக்களின் செல்போன்களை பறித்துவிடுவது போன்றும் அதை சிட்டி அழிப்பது போன்றும் கதை நகரும். நெதர்லாந்தில் நடந்த சம்பவத்தை பார்க்கும் போது 2.ஓ படம்தான் நினைவுக்கு வருகிறது.
Post a Comment