Ads (728x90)

உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறுகிறது. இதன், 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியா, 3-ம் இடம் வகிக்கும் பெல்ஜியம் அணியுடன் மோதியது. தொடக்கத்திலேயே தாக்குதலை தீவிரப்படுத்திய பெல்ஜியம் 8-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 30-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டோக் வாய்ப்பை, இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் கோலாக மாற்றி, பதிலடி கொடுத்தார். மேலும், உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுக்கு மத்தியில் ஆக்ரோஷமாக இந்திய விளையாடியது. இதன் எதிரொலியாக, 47-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங், ஃபீல்டு கோல் அடிக்கவே முன்னிலை பெற்றது.

இந்தியா வெற்றிபெற்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆட்டம் முடிவதற்கு 4 நிமிடங்கள் இருக்கும் போது அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய தடுப்பு அரண் சற்று பலவீனமானதை பயன்படுத்திக் கொண்ட பெல்ஜியம் வீரர் சிமோன் கோல் அடித்து மிரட்டினார்.

முடிவில், 2-2 என்ற கோல்கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. இரு அணிகளும் இதுவரை ஆடிய 2 ஆட்டங்களில், தலா ஒரு வெற்றி, ஒரு டிரா கண்டுள்ள போதும், கோல்களின் அடிப்படையில் இந்தியா 'சி' பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.

மேலும் வருகின்ற 8-ம் தேதி நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவுடன் மோதவுள்ளது. இதில், அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும்பட்சத்தில் நேரடியாக காலிறுதியில் இந்தியா தடம் பதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget