சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை அடுத்த வருடம் மார்ச் முதல் வழங்குவதற்கு பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.வெளிநாட்டு பயணங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு மிகவும் அவசியமான ஒரு பிறப்புச் சான்றிதழாக இது அமையும் என்று பதிவாளர் நாயகத்தின் திணைக்கள ஆணையாளர் நாயகம் என்.சி.விதானகே குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச செயலகங்கள் ஊடாக தற்சமயம் விநியோகிக்கப்பட்டுவரும் பிறப்புச் சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றவை அல்ல. நாடளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வகையில், பதிவாளர் ஒருவரது அல்லது ஆணையாளர் ஒருவரது கையொப்பத்துடன் புதிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment