
தமிழ்த்திரையுலகில் 1950 முதல் 1970 வரை நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் சந்திரபாபு. அவரது வாழ்க்கை வரலாற்றை பலரும் புத்தகங்களாக எழுதியுள்ளனர். அவற்றில் ஒரு புத்தகத்தின் பெயர்... ஜேபி - தி லெஜென்ட் ஆப் சந்திரபாபு'.
சந்திர பாபுவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கே.ராஜேஷ்வர் எழுதிய புத்தகம் இது. 'அமரன்', 'இதயத்தாமரை', 'சீவலப்பேரிப் பாண்டி' 'கோவில்பட்டி வீரலட்சுமி' போன்ற படங்களை இயக்கியவர் இவர்.
'ஜேபி: தி லெஜென்ட் ஆப் சந்திரபாபு' புத்தகத்தின் அடிப்படையில் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. அந்த படத்திற்கு 'ஜேபி: தி லெஜென்ட் ஆப் சந்திரபாபு' என்ற பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் சந்திரபாபு கேரக்டரில் நடிக்க பிரபுதேவாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இன்னொரு பக்கம், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன், மற்றும் அரசியல் கட்சி தலைவர்களான காமராஜ், வ.உ.சி. வேடங்களில் நடிக்க நட்சத்திர தேர்வு நடந்து வருகிறது.
இந்த படத்தை இந்திய ரஷ்ய கூட்டுத்தயாரிப்பு நிறுவனமான 'ருரோ இண்டர்நேஷனல்' சார்பில் ரஷ்யா தங்கப்பன், கே.ராஜேஷ்வர், ஆர்.வீ.சுவாமிநாதன் மூவருடன் நிர்வாக தயாரிப்பு பொறுப்பை குட்டி பத்மினி ஏற்றுள்ளார்.
Post a Comment