
கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரஜினி நடித்த 2.O படம் வெளியானது. ஆனாலும் முதல் இரண்டு நாட்கள், குறிப்பாக வெள்ளிக்கிழமை வரை வசூல் நிலைமை குறைவாகவே இருந்தது.
ஆனால் சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வர ஆரம்பித்தததால் படம் ஹவுஸ்புல்லாக போக ஆரம்பித்தது. திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களிலும் நல்ல வசூலையே தக்கவைத்துள்ளது.
அந்தவகையில் கடந்த 6 நாட்களில் சுமார் 15.85 கோடி ரூபாய் வசூலித்து மலையாள சினிமாவில் அதிக அளவில் வசூலித்த தமிழ்ப்படம் என்கிற சாதனையை விஜய்யின் சர்கார் படத்திடம் இருந்து தட்டிச்சென்றுள்ளது . சர்க்கார் கேரளாவில் வசூலித்த நிகர தொகை 14.71 கோடி ரூபாய். இதே ரீதியில் போனால் இந்த வாரத்திற்குள் 2.O சுமார் 20 கோடி வசூல் என்கிற இலக்கை எட்டிவிடும் என்கிறார்கள் திரைப்பட வர்த்தகர்கள்.
Post a Comment