
இந்த நிலையில் போலீசார் தன்னை தாக்கியதாக பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் வனிதா. அதோடு தனக்கு பாதுகாப்பு கேட்டு சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வனிதாவுக்கு பாதுகாப்பு வழங்கவும், தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து அந்த கோர்ட் உத்தரவை வைத்துக் கொண்டு மீண்டும் வனிதா விஜயகுமாரின் வீட்டுக்குள் நேற்று நுழைந்தார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். அவர் சுப்ரீம் கோர்ட் ஆணை நகலை காட்டி மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தார். இதுகுறித்து வனிதா நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த வீடு நான் நடித்து சம்பாதிக்கும்போது வாங்கியது. எனது தாயார் பெயரில் உள்ளது. எனக்கும், எனது மற்ற இரு சகோதரிகளுக்கும் இந்த வீட்டில் பங்கு உள்ளது. இந்த வீட்டில் நான் இருப்பதற்கு யாரும் எந்த இடையூறும் செய்யக்கூடாது என்றும் தேவைப்பட்டால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் என்னை யாரும் தடுக்க முடியாது. சுப்ரீப் கோர்ட் உத்தரவின் நகலை போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளேன் என்றார்.
Post a Comment