Ads (728x90)

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

அடிலெய்டு நகரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைந்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர்களான ராகுல், முரளி விஜய், விராட் கோலி என அனைவரும் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா தனது 16 சதத்தை அடித்து 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து நேற்று 2-வது நாளில் தனது முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பிஞ்ச் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டத்தின் 3-வது பந்திலேயே ஆட்டமிழந்த அதிர்ச்சி கொடுத்தார். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் ஹெட் 61 ரன்களுடனும், ஸ்டார்க் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி அடுத்தது விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்கள் மட்டுமே எடுத்து, இந்திய அணியை விட 15 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்திய அணி சார்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

Post a Comment

Recent News

Recent Posts Widget