Ads (728x90)

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் பரிந்துரைகளை அமுலாக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த நாட்டின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்டை சந்தித்து இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த யோசனையின் சரத்துக்கள் இன்னும் முழுமையாக அமுலாக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாததத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைகிறது.இந்தநிலையில் அதற்கு முன்னதாக இந்த விடயத்தில் தீர்க்கமான அழுத்தங்களை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Post a Comment

Recent News

Recent Posts Widget