Ads (728x90)

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ முட்டாள்தனமாகச் செயற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான ஜனாதிபதி சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷச இவ்வாறான செயற்பாட்டை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில காலம் நானும் அவருடன் சட்டத்தரணியாக செயற்பட்டேன். அந்த காலத்தில் நான் வழங்கிய ஆலோசனைகளை அவர் சரியாக செய்தார். தற்பொழுது அவருக்கு யார் ஆலோசனை வழங்குவது என்பது தெரியவில்லை.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு இடைக்கால தடை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கமைய தற்போது நாட்டில் பிரதமர் அல்லது அமைச்சரவை ஒன்று இல்லை. அத்துடன் பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கு அரசியலமைப்பு சட்டங்கள் இல்லை என்றாலும், ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கான சூழல் உள்ளதாகச் சட்டத்தரணி கோமின் தயாசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget