Ads (728x90)

சுமார் 35 இலட்சம் பெறுமதியுடைய சிகரட் தொகையை இந்நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்த சீன பிரஜைகள் மூன்று பேர் நேற்று நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொங்கொங்கில் இருந்து நேற்றிரவு 11.55 க்கு இலங்கை வந்த விமானத்தில் இவர்கள் வந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களின் பயணப்பொதியினுள் 63 ஆயிரத்து 600 சிகரட்டுகள் அடங்கிய 318 பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கம் தெரிவித்துள்ளது.

அவற்றின் பெறுமதி 34 இலட்சத்து 98 ஆயிரம் ருபாய் கணிப்பிடப்பட்டுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget