
இன்றைய தினம் மனுதாரர் தரப்பினரின் விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளது.
நேற்றைய விசாரணையின் போது, நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி இன்று வரை பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் நாளை வரை நீடித்துள்ளது.
நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று மூன்றாவது நாளுடன் நிறைவுறுத்த முடியாத காரணத்தினால் இந்த இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையிலான 7 பேர் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தினால் இந்த மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.
நேற்றைய தினம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது இடையீட்டு மனுதாரர் தரப்பினரால் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது சட்ட மா அதிபரும், இடையீட்டு மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா மற்றும் அலி சப்ரி ஆகியோரும் தங்களது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இந்த வழக்கினை விசாரணை செய்கின்ற அதிகாரம் உயர் நீதிமன்றுக்கு இல்லை என்ற விடயத்தை அவர்கள் வலியுறுத்தினர்
Post a Comment