
இன்றைய ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் மாலை 5.30 வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும், பாராளுமன்ற அமர்விலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இன்றைய பாராளுமன்ற அமர்வில் பொதுமக்களுக்கான பார்வையாளர் பகுதி மற்றும் சபாநாயகரின் விசேட விருந்தினர் பார்வையாளர் பகுதிகளில் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, ஊடகவியலாளருக்கு மாத்திரம் அவர்களுக்குரிய பார்வையிடும் பகுதியில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
Post a Comment